உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாலகங்களை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

நுாலகங்களை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

உடுமலை; உடுமலை கிராமங்களில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நுாலகங்கள் பல்வேறு வகையில் உதவி வருகின்றன. ஆனால், கிராமப்புற நுாலகங்களில், கட்டமைப்பு வசதிகள் போதியளவு மேம்படுத்தப்படாமல், உள்ளது. செல்லப்பம்பாளையம், சின்னவீரம்பட்டி, தேவனுார்புதுார், உட்பட ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்த கோரிக்கை விடப்பட்டு வருகிறது. காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை மட்டுமே செயல்படும் இந்த நுாலகங்களை கிளை நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும். இப்பகுதியில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உடுமலை நுாலகத்திற்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு வாயிலாக நுாலகங்கள் மேம்பாட்டிற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுத்தால், கிராமப்புற இளைஞர்கள் பயன்பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை