உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரவள்ளி விலை வீழ்ச்சி விவசாயிகள் அதிர்ச்சி

மரவள்ளி விலை வீழ்ச்சி விவசாயிகள் அதிர்ச்சி

திருப்பூர்:விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி கூறியதாவது:தமிழகம் முழுதும் 2.5 லட்சம் ஏக்கரில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு 1 டன், 12,000 ரூபாய்க்கு மேல் விலை கிடைத்தது. மரவள்ளி பயிருக்கு பெரிய முதலீடு, அதிகளவிலான தண்ணீர் மற்றும் தொழிலாளர் தேவை இல்லை. நடப்பாண்டு, 4 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 10 முதல் 12 டன் வரை விளைச்சல் கிடைக்கும். உற்பத்தி அதிகரிப்பு காரணமாக தற்போது இதன் விலை 5,500 முதல் 6,000 ரூபாய் என்ற அளவு கடுமையாக குறைந்து விட்டது.தற்போது ஏற்பட்டுள்ள விலை நெருக்கடிக்கு முக்கிய காரணம், உற்பத்தி மற்றும் தேவை குறித்த எந்த புள்ளிவிவரமும், தமிழக அரசின் எந்த துறையிலும் இல்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.இதனால், உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடையும் அவலம் ஏற்படுகிறது. ஆகவே, இதை விளைவித்துள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை