உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிணற்றில் விழுந்து விவசாயி தற்கொலை; துாண்டிய நண்பர்கள் இருவர் கைது

கிணற்றில் விழுந்து விவசாயி தற்கொலை; துாண்டிய நண்பர்கள் இருவர் கைது

உடுமலை; உடுமலை ஜல்லிபட்டி பொம்மையன் கோவில் வீதியை சேர்ந்த முருகேசன்,47. தனியார் விவசாய தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார். முருகேசனுக்கு, அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்,27, கார்த்திகேயன்,21 நண்பர்களாக இருந்துள்ளனர்.விஜயகுமார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாக, அவரது மனைவியிடம் முருகேசன் கூறியதால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதனால், ஆத்திரமடைந்த விஜயகுமார், கார்த்திகேயனுடன் சென்று, முருகேசனை, தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்கியும் உள்ளார். மனமுடைந்த முருகேசன், அருகிலுள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.தளி போலீசார், தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையில், விஜயகுமார், கார்த்திகேயன் ஆகியோர், தற்கொலை செய்ய துாண்டியதாக தெரிய வந்ததால், தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கை மாற்றி, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ