விவசாயிக்கு கத்திக்குத்து
திருப்பூர்: காங்கயம், மருதுறை, அரண்மனைக்காட்டை சேர்ந்தவர் சிவசாமி, 48; விவசாயி. இவரது பக்கத்து தோட்டத்துக்காரர் பாலமுருகன், 43; விவசாயி. இருவருக்கும் இடம் தொடர்பாக, கடந்த, மூன்று ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. நேற்று முன்தினம் மாலை பாலமுருகன், அவரது தோட்டத்தில் இருந்து ஜே.சி.பி. வாயிலாக மண் அள்ளி சிவசாமியின் தோட்டத்தில் கொட்டியது தொடர்பாக பிரச்னை எழுந்தது. இருவருக்கும் இடையேகைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாலமுருகன், கத்தியால் சிவசாமியை குத்தினார். காயமடைந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாலமுருகனை கைது செய்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.