வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கம் என்றால் அது திமுகாவின் பிடிமாகத்தான் இருக்கும்.
மேலும் செய்திகள்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் 16ல் போராட்டம் துவக்கம்
12-Oct-2024
பல்லடம்:ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சண்முகம் பேசியதாவது: நான்கு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் சோதனை அடிப்படையில் வினியோகிக்கப்படும் என, தமிழக அரசு கூறியது என்ன ஆனது. வாக்குறுதியை நம்பி காத்திருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. பாமாயிலை தடை செய்துவிட்டு, ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்கினால், மக்களும் நலமாக இருப்பர்; உற்பத்தி செய்யும் விவசாயிகளும் நலமாக இருப்பர்.தமிழக அரசு உடனடியாக இதை செயல்படுத்தவில்லை எனில், 100 நாள் 100 ரேஷன் கடை முன் போராட்டம் நடக்கும். அது முடிந்தபின், 101வது நாள் சென்னை தலைமை செயலகம் முன் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார்.
கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கம் என்றால் அது திமுகாவின் பிடிமாகத்தான் இருக்கும்.
12-Oct-2024