மேலும் செய்திகள்
மழை சீசனிலும் தரமான தக்காளி
30-Oct-2025
உடுமலை: உடுமலை பகுதியில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில், வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைந்ததால், விலை சரிந்து, விவசாயிகள் பாதித்துள்ளனர். உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் காய்கறி சாகுபடியும் முக்கியமானதாக உள்ளது. தக்காளியை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கும் இது ஓரளவுக்கு வருவாயை அளித்து வருகிறது. தற்போது, தக்காளி மகசூல் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து, தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், மழைக்கு தாங்கும் வகையில், அதிக சாகுபடி செலவாகும், கொடி முறையில் விவசாயிகள் தக்காளி நடவு செய்துள்ளனர். தற்போது உடுமலை பகுதிகளில் குறைந்தளவு தக்காளி சாகுபடி செய்துள்ள நிலையில், மொத்த காய்கறி சந்தைகளில், 14 கிலோ எடை கொண்ட பெட்டி, ரூ. 350 வரை விற்று வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைவு காரணமாக, ஒரு பெட்டி, ரூ.200 வரை மட்டுமே விற்று வருகிறது. மழை காலத்தில் தக்காளி மகசூல் குறைந்துள்ள நிலையில், விலையும் சரிந்து வருவதால், விவசாயிகள் பாதித்துள்ளனர். இதற்கு தீர்வு காணவும் எதிர்பார்க்கின்றனர்.
30-Oct-2025