மேலும் செய்திகள்
பிரம்மாண்ட வரவேற்பு நடத்த முடிவு
03-Feb-2025
திருப்பூர் : அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு பாராட்டு விழா, அன்னுார், கஞ்சப்பள்ளியில் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக திருப்பூர் மாநகர அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று அ.தி.மு.க.,வினர் ஆலோசனை மேற்கொண்டனர்.மாவட்டசெயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து பேசியதாவது:அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை, வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் பொதுசெயலாளர் பழனிசாமி. மத்திய அரசு உதவி செய்யவில்லை என்றாலும், மாநில அரசின் முழுநிதியில், கொரோனா காலத்தில் நிதி திண்டாட்டம் இருந்த போதும், நிதியை ஒதுக்கி, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார். புதிய வரலாறு படைத்தார். ஆட்சி மாறிய பிறகும், தொடர்ந்து வலியுறுத்தி, திட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.வறண்டு கிடந்த நிலங்களில், 1,045 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விட்டு, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தின், 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறியதால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் பாராட்டு விழா நடத்துகின்றனர். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியது அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி தான் என்று உணர்ந்து, பாராட்டு விழா நடத்துகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், எம்.எல்.ஏ., விஜயகுமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், இணை செயலாளர் சங்கீதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
03-Feb-2025