உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தக்காளியில் விட்டதை பிடிக்க விவசாயிகள் தீவிர முயற்சி

தக்காளியில் விட்டதை பிடிக்க விவசாயிகள் தீவிர முயற்சி

பொங்கலுார்: கார்த்திகைப் பட்டத்தில் நடவு செய்த தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. அவற்றை வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் விலை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது.தற்போது கோடை வெயில் வாட்டத் துவங்கி உள்ளது. இதனால், உற்பத்தி இழப்பு ஏற்பட்டு, விலை உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வை எதிர்பார்த்து கணிசமான விவசாயிகள் உயர் ரக தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.அவற்றை ஆப்பிள் தக்காளி என்றும் அழைக்கின்றனர். இவை நிலத்தில் பட்டால் அழுகிவிடும்.மேலும் கடும் வெப்பத்தாலும் பாதிக்கப்படும். இதனை தவிர்ப்பதற்காக விவசாயிகள் இரும்பு அல்லது மரக்கம்புகளை நட்டு அவற்றில் கயிறு கட்டி செயற்கையாக பந்தல் போன்று அமைத்து வருகின்றனர். இதனால், தக்காளி செடிகள் நிமிர்ந்து நேராக நிற்பதால் மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு அதிக அளவில் பாதிக்காமல் தப்பிவிடும். எனவே, வரும் கோடை காலத்தில் ஏற்படும் விலை உயர்வை பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை