விவசாயிகளே கவனியுங்க...
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், குறு, சிறு விவசாயிகளுக்கு, வேளாண் பொறியியல் துறை சார்பில் புதிய மின்மோட்டார் மானியம் வழங்கப்பட உள்ளது.மூன்று ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள், நீர் இறைப்பதற்காக மின் மோட்டார், பம்ப் செட்கள் வாங்கவும்; திறன் குறைந்த பழைய மோட்டார்களை மாற்றி, புதிதாக பொருத்தவும், 15 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மாவட்டத்தில், 95 விவசாயிகளுக்கு மின் மோட்டார் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொது மற்றும் ஆதிதிராவிடர் விவசாயிகள், குறு, சிறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின் இணைப்பு அட்டை, வங்கி பாஸ்புக் நகல் ஆகியவற்றுடன், www.tnhorticulture.tn.gov.inஎன்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.