உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆன்லைனில் உரம் வாங்கி விவசாயிகளே ஏமாறாதீர்

ஆன்லைனில் உரம் வாங்கி விவசாயிகளே ஏமாறாதீர்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு அறிக்கை:உர கட்டுப்பாடு சட்டப்படி, ரசாயனம் மற்றும் இயற்கை உரங்களை ஆன்லைனில் விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைனில் விற்கப்படும் உரங்கள் தரமானதா என்பதை உறுதிப்படுத்த இயலாது; அவற்றின் விலையும் அதிகமாக இருக்கும்.ஆன்லைனிலோ அல்லது தோட்டங்களுக்கு நேரடியாக வந்து விற்பனை செய்யும் முகவர்களிடமிருந்தோ உரங்கள் வாங்கக்கூடாது. இத்தகைய உரங்களை பயன்படுத்துவதால், சாகுபடி செலவு அதிகரிப்பதோடு, மகசூல் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.விவசாயிகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை, வேளாண் துறையில் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களிலிருந்து மட்டுமே வாங்கி பயன்படுத்தவேண்டும்.உர ஆய்வாளர்கள் மற்றும் பூச்சி மருந்து ஆய்வாளர்கள், தரத்தை உறுதிப்படுத்தி, சரியான விலைக்கு விற்பனை செய்வதையும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், குறைவான விலையில் தரமான உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை