உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விவசாயிகள் எதிர்பார்ப்பு

 விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர்: கோர்ட் உத்தரவுப்படி உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், நேற்று விவசாய அமைப்பினர் மனு அளித்தனர். தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர் மலரவன்: திருமூர்த்தி அணையிலிருந்து, முதல் மண்டல பாசனத்துக்கு, ஜன. 10ம் தேதிக்கு முன்னர் தண்ணீர் திறந்து, ஐந்து சுற்று வழங்க வேண்டும். கலெக்டர் உத்தரவிட வேண்டும். தாராபுரம் தாலுகா, உப்பாறு பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் திருஞானசம்பந்தமூர்த்தி: ஏற்கனவே உப்பாறு நீர் தேக்கத்துக்கு, பி.ஏ.பி. திட்டத்திலிருந்து 300 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, உப்பாறு நீர் தேக்கத்துக்கு நீர் வழங்கிய பின்னரே, வட்டமலைக்கரை ஓடை நீர் தேக்கத்துக்கு தண்ணீர் வழங்கலாம் என, கோர்ட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, உப்பாறு நீர் தேக்கத்துக்கு நடப்பாண்டுக்கான 300 மில்லியன் கன அடி தண்ணீரை வழங்கியபின்னரே, வட்டமலைக்கரை ஓடைக்கு வழங்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை