மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
23-Oct-2025
உடுமலை: திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 28ம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 28ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக அறை எண்: 20 ல் நடக்கிறது. இதில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள வேணடும். மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க உதவும் வகையில், வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலவலர்களைக் கொண்ட, வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி மையத்தின் வாயிலாக, விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் பங்கேற்கலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
23-Oct-2025