உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

பொங்கலுார்: கார்த்திகை பட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை மாதம் பிறந்ததும் மழை குறையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தை மாதம் வரை மழை நீடித்தது. இதனால், சின்ன வெங்காய நடவு பணிகள் பாதிக்கப்பட்டது. கடந்த சீசனில் அறுவடையின் போது போதிய விலை கிடைக்காததால் உடனுக்குடன் விற்பனை செய்த விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் நடவு செய்வதா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தனர். ஆனால், தற்பொழுது சின்ன வெங்காயம் கிலோ, 100 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. நல்ல விலை கிடைப்பதால் இந்த சீசனில் நடவு செய்யப்படும் வெங்காயத்திற்கும் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ