உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகள் மகாசபை ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

விவசாயிகள் மகாசபை ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

உடுமலை: உடுமலையில் அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, தாலுகா செயலாளர் அருணாசலம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில இணைசெயலாளர் செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், 'மடத்துக்குளம் தாலுகாவில், நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய நில உரிமையாளர்களுக்கு பாத்தியமான சுமார், 750 ஏக்கர் நிலம் உள்ளது. நில உரிமையாளர்கள் இடம் பெயர்வு உள்ளிட்ட காரணங்களால், அப்பகுதி விவசாயிகள் அந்நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். அந்நிலங்களை முறைகேடாக பத்திரபதிவு செய்துள்ளனர். பத்திரபதிவு செய்த நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். உடுமலை நகர செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி