உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகள் போராட்டம் போலீஸ் குவிப்பால் பரபரப்பு

விவசாயிகள் போராட்டம் போலீஸ் குவிப்பால் பரபரப்பு

பொங்கலுார் : திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்காக, கடந்த, 27ல் தண்ணீர் திறக்கப்பட்டது. பத்து நாளாக பிரதான வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. பொங்கலுார் ஒன்றியம், பெருந்தொழுவு வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. இதனால், ஆவேசமடைந்த விவசாயிகள், 'எங்கள் பகுதி வறட்சியில் சிக்கியுள்ளதால் உடனே தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால், வாய்க்காலில் குதிப்போம்,' என்று கூறி ஆண்டிபாளையம் வாய்க்கால் அருகே திரண்டனர். அவிநாசிபாளையம் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, பொங்கலுார் எஸ்.டி.ஓ., சுபாஷினி விவசாயிகளுடன் பேச்சு நடத்துவதற்காக வந்தார். அவரை சூழ்ந்து கொண்ட விவசாயிகள், 'எங்கள் பகுதிக்கு இன்னும் ஏன் தண்ணீர் திறக்கவில்லை. எப்பொழுது திறப்பீர்கள். எங்களுக்கு ஐந்து நாள் மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. பாசனத்திற்கு ஏழு நாள் விட வேண்டும்,' என கோரிக்கை வைத்தனர். விவசாயிகளுடன் பேச்சு நடத்திய எஸ்.டி.ஓ. சுபாஷினி, ஒவ்வொரு பகுதியாக தண்ணீர் திறக்க தாமதம் ஆகிறது. வரும், 12-ல் தண்ணீர் திறக்கப்படும், என்றார். அதிகாரி உறுதி தெரிவித்ததால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை