உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகளை கத்தியால் குத்திய வாலிபர் மீது குண்டாஸ்: தந்தை போலீசில் புகார்

மகளை கத்தியால் குத்திய வாலிபர் மீது குண்டாஸ்: தந்தை போலீசில் புகார்

திருப்பூர்; சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது குடும்பத்தினருடன் நேற்று மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனு: தனியார் பள்ளி ஆசிரி யையான என் மகளை, கடந்த 2023ம் ஆண்டில், சையது முகமது என்ற நபர் திருமணம் செய்து தர வற்புறுத்தி வீட்டில் வந்து தகராறு செய்தார். வேலம்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் அவரை கடத்திச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்று அது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இது குறித்த வழக்குகள் விசாரணையில் உள்ளது. கடந்த 30ம் தேதி இரவு 8:00 மணியளவில், பவுசியா நடந்து சென்று கொண்டிருந்தார். மக்கள் நடமாட்டம் உள்ள செல்லம்மாள் காலனி பகுதியில், அவரை வழி மறித்து, இறைச்சி வெட்டும் கத்தியால் கொலை செய்யும் நோக்கத்தில் சையது முகமது அவரை கடுமையாக குத்திக் காயப்படுத்தினார். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். தொடர்ந்து எங்கள் மகளை கொலை செய்யும் நோக்கில், மிரட்டி தாக்குதல் நடத்தி வரும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது விசாரணையில் உள்ள வழக்குகளிலும் அவருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ