தொழிலாளி கொலை தந்தை, மகன் கைது
உடுமலை: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கணியூர் ஆஸ்பத்திரி மேடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 29; சென்ட்ரிங் கான்ட்ராக்டர். அவர், எம்.ஜி.ஆர்., நகரில் வீடு கட்டும் பணி மேற்கொண்டார். வீட்டின் மேற்பார்வை பணியை சிவப்பிரகாஷ், 25, அவரது தந்தை மதிவாணன், 46, ஆகியோர் மேற்கொண்டனர். கம்பி கட்டுமான பணியை பாதியில் நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம், சென்ட்ரிங் பொருட்களை எடுக்க, பிரகாஷ், அவரது நண்பர்கள் ரஞ்சித், சத்தியமூர்த்தி, விக்னேஷ் ஆகியோர் சென்ற போது, மதிவாணன், சிவப்பிரகாஷ் இணைந்து அவர்களை கத்தியால் குத்தினர். கோவை அரசு மருத்துவமனையில் பிரகாஷ் இறந்தார். மற்ற மூன்று பேரும் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கணியூர் போலீசார், தந்தை, மகனை கைது செய்தனர்.