உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழுதான மின்கம்பம்; பள்ளி அருகே ஆபத்து

பழுதான மின்கம்பம்; பள்ளி அருகே ஆபத்து

திருப்பூர்; மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகே, மிகவும் சேதமான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, கே.செட்டிபாளையம் தொடக்கப்பள்ளி அருகே, மின்கம்பம் நீண்ட நாட்களாக சேதமான நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில், கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், மின்பணியாளர்கள் அக்கம்பத்தில் ஏறி, பணிகளை செய்யவும் அஞ்சுகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அப்பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், பழுதான மின்கம்பம் உள்ளது. எனவே, பொது நலன்கருதி, பழுதான மின்கம்பத்தை மாற்றிவிட்டு, விரைவில் புதிய மின்கம்பம் நட வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி