நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவானது
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நுகர்வோர் சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் நடந்தது. லியாகத் அலி தலைமை வகித்தார். நுகர்வோர் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்து திருப்பூர் மாவட்ட நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கி அதன் தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக சரவணன், பொருளாளராக லியாகத் அலி இணை செயலாளராக சிந்து, துணைத்தலைவர்களாக மணிக்குமார், கிருஷ்ணசாமி, ரவி மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக ஜான் சாமுவேல், ஹரிஹரன் ராமர், காதர் பாட்சா, கோவிந்தராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் திருப்பூர் டி.ஆர்.ஓ. மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட, 12 நுகர்வோர் அமைப்புகளின் விவரத்தை அனைத்து அரசுத்துறைக்கும் அனுப்புதல், முறையாக வழிநடத்தாமல் நுகர்வோர் சங்கத்தை அவமதிப்பு செய்வோர்மீது நடவடிக்கை எடுத்தல் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.