உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுால் மில்லில் தீ விபத்து; போலீசார் விசாரணை

நுால் மில்லில் தீ விபத்து; போலீசார் விசாரணை

உடுமலை ; உடுமலையில், நுால்மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை, சின்னவீரம்பட்டி, இந்திரா நகர் பகுதியில், தனியார் நுாற்பாலை உள்ளது. இங்கு, உள்ளூர் தொழிலாள்ர்கள் மட்டுமின்றி, பீகார், அசாம், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.நேற்று இரவு, இத்தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பணியிலிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு உடுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று, ஆறு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், மில்லில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பஞ்சு மற்றும் நுால் எரிந்து நாசமானது.மின் கசிவால் விபத்து ஏற்பட்டிருந்தால், உடனடியாக மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், மின் வயர்கள், கேபிள்கள் தொடர்ந்து எரிந்த நிலையில், பணியிலிருந்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என தொழிலாளர்கள், அதிகாரிகள் தெரிவித்தனர்.தீ விபத்து குறித்து, உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை