மில்லில் தீ விபத்து
முத்துார், தண்ணீர்பந்தலை சேர்ந்தவர் அரவிந்த், 45. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான 'ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்' செயல்படுகிறது. நேற்று காலை, மெஷினில் ஒரு பகுதியில் கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து, பஞ்சு சேகரித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் தீ பரவியது. தகவலறிந்து சென்ற வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மெஷின், பஞ்சு, கட்டடம் என, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் சேதமானது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.