பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
உடுமலை: அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்களில், பணியாற்றும் பாதுகாவலர்களுக்கு, உடுமலை தீயணைப்பு துறையினர் வாயிலாக தீத்தடுப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தியேட்டர்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளில் பாதுகாவலர்களாக பணியாற்றுபவர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி வழங்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, உடுமலை தீயணைப்பு நிலையத்தில், இன்று, (9ம் தேதி) காலை தனியார் செக்யூரிட்டி பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.