மேலும் செய்திகள்
மங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?
10-Nov-2024
உடுமலை; தமிழகத்தில், ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, துாத்துகுடி மாவட்டம் ஏரல், செங்கல்பட்டு - கோவளம், காஞ்சிபுரம்- படப்பை, சிவகங்கை - புதுவயல் மற்றும் திருநெல்வேலி என, ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.தீயணைப்பு நிலையங்களில், ஒரு வாகனம், ஒரு தீயணைப்பு அலுவலர், 2 முன்னணி தீயணைப்பு வீரர்கள், டிரைவர் உட்பட, 17 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான தளவாட பொருட்களும் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவில், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகளவு உள்ள நிலையில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.அதன் அடிப்படையில் தற்போது, அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மடத்துக்குளம் தாலுகாவில், தற்காலிகமாக தீயணைப்பு நிலையம் துவக்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் தீயணைப்பு நிலையம் துவக்கப்படும், என, தெரிவித்தனர்.
10-Nov-2024