மீ ன் விற்பனை ஜோர்
தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால், திருப்பூர், தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கான மீன் வரத்து அதிகமானது. நேற்று, 65 டன் கடல் மீன்கள் விற்பனைக்கு வந்தன. வஞ்சிரம் கிலோ 550 - 650 ரூபாய், நெத்திலி 180, சிலா மீன், 350, வாவல், 500, இறால், 350, சங்கரா, 250, பாறை, 220, மத்தி, 120, ஜிலேபி, 180, நண்டு 350 ரூபாய்க்கு விற்றது. மீன் வாங்க வந்தோரின் எண்ணிக்கையால், விலை அதிகமானது.மீன் வியாபாரிகள் கூறுகையில், 'தடை காலத்துக்கு பின் நடப்பு வாரம் தான் அதிகளவில் மீன்கள் வரத்தாகியுள்ளது. வரத்து அதிகரித்தால், வரும் நாட்களில் மீன் விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளது,' என்றனர்.