உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீன் விற்பனை துள்ளியது 

மீன் விற்பனை துள்ளியது 

குடியரசு தின பொது விடுமுறை நாளான நேற்று கூடிய தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் வர துவங்கினர். பார்க்கிங் இடங்கள் நிறைந்து மார்க்கெட் நுழைவு வாயில் வரை வாகனங்கள் நிறைந்தன. ஒவ்வொரு கடைகளிலும் மீன்களை தேர்வு செய்த வாடிக்கையாளர் பில் போட வரிசையில் காத்திருந்தனர். மொத்த வியாபாரிகளும் அதிகளவு மீன்களை ரோட்டோர புறநகர கடை களுக்கு வாங்கிச் சென்றனர். கடல் மற்றும் அணை மீன் வரத்து, 65 டன்னாக இருந்தது. மதியத்துக்குள், 40 டன் மீன்கள் விற்றுத்தீர்ந்தது. இரண்டு வாரத்துக்கு பின் மீன் விற்பனை அதிகரித்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மட்டன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சி கடைகளிலும் விற்பனை சுறுசுறுப்பாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை