உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யல் வெள்ளம்; வீணாகும் தண்ணீர்

நொய்யல் வெள்ளம்; வீணாகும் தண்ணீர்

திருப்பூர்; மேற்கு தொடர்ச்சி மலை, சிறுவாணி மலைத் தொடரின் கிழக்கு சரிவு களில் இயற்கையாய் உருவெடுத்த ஓடைகளில் இருந்து வழிந்தோடி வரும் நீர் தான், நொய்யல் ஆற்றின் ஆதாரம்.மழைக்காலங்களில் மட்டுமே பெருக்கெடுக்கும் நொய்யல் ஆற்று நீரை, சேமித்து, ஆண்டுமுழுக்க பயன்படுத்த வேண்டிய நீர் மேலாண்மை திட்டம் என்பது, கடந்த, 800 ஆண்டுகளுக்கு முன், கொங்கு மண்டலத்தை சோழர்கள் ஆண்ட காலத்திலேயே இருந்துள்ளது.'அக்கால கட்டத்தில், நொய்யலை ஆதாரமாக கொண்டு, 32 அணைக்கட்டுகள், 40க்கும் மேற்பட்ட குளங்கள் கட்டமைக்கப்பட்டது' என, ஆவணங்கள் கூறுகின்றன.பெருக்கெடுக்கும் நீர் முழுதும் வீணாவதை தடுக்க, இடையிடையே அணைக்கட்டுகளும், அது நிரம்பி குளங்களை நிரப்பும் வகையிலான கட்டமைப்பும் இருந்துள்ளது.ஆனால், இன்று... நொய்யல் ஆற்றை சார்ந்திருப்பது, வெறும், 19 குளங்கள் தான் என்கிறது, கணக்கெடுப்பு. இன்றும், மேற்கு தொடர்ச்சி மலையில், மழை கொட்டி தீர்க்கும் போது, நொய்யலில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அதில் பெருமளவு நீர் எங்கும் சேமிக்கப்படாமல் வீணாகிறது.கோவை துவங்கி, திருப்பூர், ஈரோடு வரையிலான அதன் வழித்தடத்தின் பல இடங்களில், குப்பை, கழிவுகளாலும் மாசுபட்டு கிடக்கும் நொய்யல் ஆற்றின் நீர் கட்டமைப்பு மீட்டெடுக்கப்பட வேண்டும்.நொய்யலை மையப்படுத்தி, மீண்டும் நீர்மேலாண்மை திட்டம் வகுக்கப்பட வேண்டும்; பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதே, எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ