உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூக்கள் குவிகின்றன : விலை கடும் சரிவு

பூக்கள் குவிகின்றன : விலை கடும் சரிவு

திருப்பூர்: திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு, தினமும் இரண்டு டன் மல்லிகை பூக்கள் விற்பனைக்காக குவிகின்றன. சீசன் மந்தம் காரணமாக பூக்களை வாங்க ஆளில்லாததால், பூ விலை குறைந்துள்ளது. நேற்று, மல்லிகை கிலோ 250 - 300, முல்லை, 90 - 120, அரளி, 250, செவ்வந்தி, 200 ரூபாய்க்கு விற்றது.பூ வியாபாரிகள் கூறியதாவது:தமிழ் புத்தாண்டுக்கு பின் விசேஷ தினங்கள் இல்லை. அடுத்தடுத்து தேய்பிறை முகூர்த்தம் பூ விற்பனை குறைவாகவே இருந்தது. அமாவாசைக்கு அடுத்தடுத்த நாளிலும் விற்பனை இல்லை. பனி முற்றிலும் விலகி, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூ வரத்தும் உயர்ந்துள்ளது. பூ வரத்து தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விற்பனை ஜோராக இல்லை. இதனால், மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் விலை குறைந்துள்ளது. விற்பனை அதிகரித்து, வரத்து குறையும் வரை இதே நிலை தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ