மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
16-Oct-2024
திருப்பூர் ; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பூரில் நடத்திய ஆய்வில், குட்கா விற்பனை மற்றும் சுகாதாரமின்றி செயல்பட்ட ஏழு கடைகள் சிக்கின; மொத்தம் ரூ.36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், மாநகராட்சி நகர் நல அலுவலர் முருகானந்தம் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர், உணவுப்பொருள் விற்பனை கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள 41 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்பாடு, சுகாதாரமின்றி செயல்பட்ட ஆறு கடைகளுக்கு, மொத்தம் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. காலாவதி தேதி குறிப்பிடாத மற்றும் அதிக நிறமிகள் கொண்ட கார வகைகள் 21 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில், காசிராஜன் என்பவருக்கு சொந்தமான பாலாஜி டெலிகாம் என்கிற மொபைல் போன் கடையில் நடத்திய ஆய்வில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. 1.70 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள் சம்பந்தமாக, 94440 42322 என்கிற எண்ணில் புகார் அளிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
16-Oct-2024