உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெற்றோருக்கு பாத பூஜை 

பெற்றோருக்கு பாத பூஜை 

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி சார்பில் செயல்படும் பாலவிகாஸ் பள்ளி மாணவர்கள், தங்கள் பெற்றோரை மதித்து வணங்கி ஆசி பெறும் வகையில் பாத பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தாராபுரம், புலியவலசு கிராமத்தில், அப்பகுதி மண்டலம் சார்பாக மாணவர்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 30 மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும், சத்ய சாய் சேவா அமைப்பினரும் கலந்து கொண்டனர். சத்ய சாய் சேவா சமிதியின் மாவட்ட தலைவர், கல்வி அணி, இளைஞர் அணி மற்றும் சேவை அணி ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி