உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மாணவியருக்கு

பள்ளி மாணவியருக்கு

திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், பள்ளி மாணவியருக்கு கடந்த, பத்து நாட்களாக அளிக்கப்பட்ட தற்காப்பு கலை பயிற்சி நிறைவு பெற்றது.திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் கீழ் கடந்த, பத்து நாட்களாக தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.இதற்காக, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி, இடுவம்பாளையம், குமார் நகர், அனுப்பர்பாளையம் மற்றும் பழனியம்மாள் என, ஐந்து அரசு மேல்நிலை பள்ளிகளில் இருந்து, 80 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஜெய்வாபாய் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது.'அட்வன்செர் அகாடமி' பயிற்சியாளர் சீதாலட்சுமி உள்ளிட்டடோர் பயிற்சி அளித்தனர். அதில், கற்றல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வெற்றி ஆகிய இலக்குகளை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சி நிறைவு விழாவில், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர்கள் சுஜாதா, தீபா சத்யன், ராஜராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா ஆகியோர் பங்கேற்று பேசினர்.பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !