மேலும் செய்திகள்
விசாரணை கைதி மரணம் வன ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
02-Aug-2025
உடுமலை; உடுமலை அருகே, மலைவாழ் மக்கள் வாழ்வாதார மேம்பாட்டு குழுவினருக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி, வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடுமலை வனச்சரகம், சின்னாறு, கோடந்துாரில், 250க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியில், சின்னாற்றின் கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு, வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பகிறது. பக்தர்கள் வசதிக்காக, மலைவாழ் மக்கள் மேம்பாட்டு குழு சார்பில், 9 வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதற்கான டிரைவர்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புக்காக, மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள், 10 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகனங்களில் அழைத்துச்செல்ல, ஒரு நபருக்கு, ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், 20 ரூபாய் வாகனத்திற்கான டீசல், பராமரிப்புக்கும், மேம்பாட்டு குழு கணக்கில், ரூ. 20 செலுத்தப்பட்டு, ஊதியம் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மலைவாழ் மக்கள் மேம்பாட்டு குழு கணக்கில் வசூலிக்கும் வனத்துறை அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமலும், வாகன பராமரிப்புக்கு நிதி ஒதுக்காமலும், முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், மூன்று மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, குடும்பத்துடன் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை வனச்சரக அலுவலர் வாசு பேச்சு நடத்தி, ''உடனடியாக நிலுவைத்தொகை வழங்கப்படும்'' என உறுதியளித்தார். இதனையடுத்து, மலைவாழ் மக்கள் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.
02-Aug-2025