மேலும் செய்திகள்
ஆற்றில் மூதாட்டி சடலம்; போலீசார் விசாரணை
20-Nov-2025
வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், வட்டமலைக்கரை அணை பகுதியில் டிச., 6ம் தேதி அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், இறந்த பெண்ணின் கை, கால்களும், உடைமைகளும் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், தலையின் ஒரு பகுதியில் கல்லால் தாக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இறந்த பெண் யார் என்பது குறித்து, இரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அதில், கொலையான பெண், பழனியை சேர்ந்த வடிவுக்கரசி, 45, என்பதும், அவரை, ஆண் நண்பரான அதே ஊரை சேர்ந்த சங்கர், 55, என்பவர் கொலை செய்ததும் தெரிந்தது. சங்கர், 1998ம் ஆண்டு போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பின், ஏலக்காய் கடை நடத்தியும், செக்யூரிட்டியாகவும் வேலை செய்து வந்தார். வடிவுக்கரசியிடம் பழக்கம் ஏற்பட்ட பின், அவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். வேலை வாங்கி தராததால், திரும்ப பணத்தை கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. இதனால், வடிவுக்கரசியை தலையில் தாக்கி, தீ வைத்து எரித்துள்ளார். சங்கரை போலீசார் கைது செய்தனர்.
20-Nov-2025