உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏலச்சீட்டு நடத்தி மோசடி; பாதிக்கப்பட்டோர் தர்ணா

ஏலச்சீட்டு நடத்தி மோசடி; பாதிக்கப்பட்டோர் தர்ணா

திருப்பூர்; திருப்பூரில், ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கமிஷனர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட, 23 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், பாளையக்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். கே.வி.ஆர்., நகர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த வர்கள் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். இதன் வாயிலாக, 35 லட்சம் ரூபாயை செலுத்தினர். சீட்டுக்கான தவனை முடிந்தும் கூட, ஏலச்சீட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் காலம் கடத்தினர். இதுதொடர்பாக, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று பாதிக்கப்பட்ட மக்கள் மனுவுடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, 23 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை