இலவச எலும்பு மூட்டு மருத்துவ முகாம் நீட்டிப்பு
திருப்பூர்; ஸ்ரீ சரண் மருத்துவமனையில் இலவச எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக ஆஸ்டியோபோரோஸிஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூர், பி.என்.ரோடு, போயம்பாளையம் ஸ்ரீ சரண் மருத்துவமனையில் இலவச எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை முகாம் நடந்து வருகிறது. இதில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்கள் மணிகண்டன் மற்றும் துரைராஜ் பங்கேற்று மக்களுக்கு இலவச ஆலோசனை வழங்கினர். இம்முகாமில் எலும்பு அடர்த்தி (பி.எம்.டி) பரிசோதனை, பிஸியோதெரபி, உணவுக்கட்டுப்பாடு ஆலோசனை வழங்கப்பட்டன. கால்சியம், வைட்டமின் டி, எக்ஸ்ரே பரிசோதனைகள் 50 சதவீத சலுகைக்கட்டணத்திலும் அறுவை சிகிச்சைகள் 20 சதவீத சலுகைக்கட்டணத்திலும் செய்யப்பட்டது. இம்முகாம் வரும் 15ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். பழனிசாமி தெரிவித்துள்ளார். விவரங்களுக்கு 80564 - 04040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.