ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம்
பொங்கலுார்; ஹிந்து அறநிலையத்துறை சார்பில், பொங்கலுாரிலுள்ள திருநீலகண்டியம்மன் கோவிலில், ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடைபெற்றது.செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு நான்கு கிராம் திருமாங்கல்யம், மெட்டி, வேஷ்டி, சட்டை, முகூர்த்த புடவை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, போர்வை, மிக்ஸி, கிரைண்டர், கைக்கடிகாரம், எவர்சில்வர் பாத்திரம், பூஜை சாமான்கள், ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள், சுமங்கலி பொருட்கள், பாய், பூமாலை உள்ளிட்ட சீர்வரிசை வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஜோடிக்கும் தலா, 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், ஹிந்து அற நிலையத்துறை சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், அறநிலையத்துறை துணை ஆணையர் வர்ஷினி, உதவி ஆணையர் தனசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.