மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
10-Oct-2024
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீசரண் மெடிக்கல் சென்டர், மங்கலம் -- சோமனுார் ரோடு ஸ்ரீவெங்கடேஸ்வரா கிளினிக் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.முகாமில், மகளிர் நலம், குழந்தைகள் நலம், குழந்தையின்மைக்கான சிகிச்சை, காது மூக்கு தொண்டை போன்ற மருத்துவ பிரிவுகளில் இருந்து, சிறப்பு சிகிச்சை நிபுணர்களால், இலவச ஆலோசனை அளிக்கப்பட்டது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.முகாம் குறித்து, சரண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பழனிசாமி கூறுகையில், ''முகாமில், அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு சலுகை கட்டணத்தில அறுவை சிகிச்சை செய்யப்படும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில், திருப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்,'' என்றார்.
10-Oct-2024