ஈஷா வழங்கும் இலவச பயிற்சி
திருப்பூர்: ஈஷா யோகா மையம் சார்பில், திருப்பூர் மற்றும் அவிநாசியில் நாளை இலவச யோகா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. திருப்பூர் மற்றும் அவிநாசி ஈஷா யோகா மையங்கள் சார்பில் நாளை (26ம் தேதி), சூரியசக்தி என்ற தலைப்பில், இலவச யோகா பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் ஏழு வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி வாயிலாக, ஆற்றல், கவனம், நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, பலவீனமான உடல் அமைப்பும் சரியாகும். இப்பயிற்சி காலை 6:30 - 8:00 மணி, 8:15 - 8:45, மாலை 5:00 - 6:30 மணி மற்றும் 6:45 - 8:15 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும். தங்கள் வசதிக்கேற்ற நேரத்தில் இணைந்து கொள்ளலாம். இப்பயிற்சி திருப்பூரில் ஹார்வி திருமண மண்டப வளாகத்திலும், அவிநாசியில் ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரே செல்வம் காம்ப்ளக்ஸ் வளாகத்திலும் நடைபெறும். பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள், 83000 29000 (திருப்பூர்), 90033 31776 (அவிநாசி) ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.