மகிழ்ச்சியான சூழலில் மனநிறைவான கல்விபெருமிதம் கொள்கிறது பிரன்ட்லைன் பள்ளி
'மாணவ, மாணவியர் மனநிறைவான சூழலில் கல்வி கற்கின்றனர்' என் கின்றனர் பிரன்ட்லைன் பள்ளி நிர்வாகத்தினர்.திருப்பூர், கோவில் வழி பகுதியில் இயங்கும் பிரன்ட்லைன் பள்ளியின் சிறப்புகள் குறித்து, அதன் தாளாளர் சிவசாமி கூறியதாவது:திருப்பூரின் முன்னணி கல்வி நிறுவனமான பிரன்ட்லைன் பள்ளிகள், 26வது ஆண்டில் மகத்தான கல்வி சேவை வழங்கி வருகிறது. எம் பள்ளியில் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள், தற்போது, பல்வேறு துறைகளில், குறிப்பாக மருத்துவம், பொறியியல், திரைப்படம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவு போன்ற துறைகளில் கோலோச்சி வருகின்றனர்.நவீன வசதிகள், நல்ல சூழல் நிறைந்த வகுப்பறையில், எவ்வித மன அழுத்தமும் இன்றி, மனநிறைவுடன் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 15 மாணவருக்கு ஒரு ஆசிரியர் வீதம், தரமான கல்வி வழங்கப்படுகிறது. அவர்களின் ஆராய்ச்சி சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் மொழி, கணிதம், அறிவியல் மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகம், அனைத்து உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.மிகப்பெரிய விளையாட்டு மைதானம், தனித்தனி பயிற்சியாளர்கள் உள்ளனர். அதன் விளைவாக, கடந்த, 13 ஆண்டாக மாவட்ட அளவில் எம் பள்ளி, ஒட்டுமொத்த 'சாம்பியன்ஷிப் பட்டம்' பெற்று வருகிறது.மாநில, தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று, முதல் பரிசு பெற்றுள்ளனர். பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் நிறைந்த நுாலகம் வாயிலாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது நேசிப்பு உருவாக்கப்படுகிறது. மழலை மாணவர்களுக்கு செயல் வழி மற்றும் விளையாட்டு வழி கற்றல், கலைகள் வாயிலாக, அவர்கள் மகிழ்வுறும் வகையில் கல்வி போதிக்கப்படுகிறது.தினசரி, உடல்திறன் பயிற்சிகள், மாணவர்களின் கை வண்ணத்தில் உருவான படைப்புகளின் காட்சிப் பொழுதுகள் ஆகியவை, குழந்தைகளுக்கு அனுபவ கல்வியை வழங்குகின்றன.பள்ளியில், 135 மாணவ, மாணவியர், தங்கள் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டு, உலக சாதனை நிகழ்த்தியது, எங்கள் சாதனை பயணத்தின் மைல் கல். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில், தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.