உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய தடகள போட்டியில் பிரன்ட்லைன் மாணவர்

தேசிய தடகள போட்டியில் பிரன்ட்லைன் மாணவர்

திருப்பூர், : மாநில அளவிலான தடகள போட்டி, ஈரோடு எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடைபெற்றது. 38 மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டியில், திருப்பூர் தி பிரன்ட்லைன் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர்.மாணவர் முகமது சல்மான், 17 வயது பிரிவு 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி, 100 மீ., ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றார். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, தேசிய அளவிலான எஸ்.ஜி.எப்.ஐ., 200 மீ., ஓட்டம் மற்றும் 4x100 மீ., தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். 14 வயது பிரிவு உயரம் தாண்டுதலில், மாணவர் செல்வ அனிஷ் வெண்கல பதக்கம் பெற்றனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் நந்தகுமாரையும், பிரன்ட்லைன் பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !