மேலும் செய்திகள்
ரயில் கட்டணம் ஜூலை 1 முதல் உயர்கிறது
25-Jun-2025
திருப்பூர் : திருப்பூரில், 300க்கும் அதிகமான, காஜா பட்டன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சம்பளம், மூலப்பொருள் விலை, மின்கட்டண உயர்வு என உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்க தலைவர் ருத்ரமூர்த்தி கூறுகையில், ''எங்களுக்கு சேர வேண்டிய கட்டணம், 45 நாட்களுக்குள் கிடைப்பதில்லை. நிலுவை தொகையை வசூலிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.பல்வேறு பிரச்னைகள் தொடர்வதால், தொழில் நடத்த ஏதுவாக, 'காஜா பட்டன்' பொருத்தும் கட்டணத்தை, ஆக., 1 முதல், 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். இந்த கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கொடுக்க வேண்டும்,'' என்றார்.
25-Jun-2025