உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சிலைகள் கரைப்பு

திருப்பூர்; திருப்பூரில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1100 விநாயகர் சிலைகள், சாமளா புரம் குளத்தில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுதும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள், கடந்த 27ம் தேதி பிரதிஷ்டை செய்யப் பட்டன. பின், ஒவ்வொரு அமைப்பாக அந்தந்த பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. திருப்பூர் மாநகர மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 1,100 சிலைகள் மற்றும் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் வழங்கிய சிலைகள் ஆகியவற்றுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட், கே.வி.ஆர்., நகர், தாராபுரம் ரோடு என, மூன்று இடங்களில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, ஆலாங்காட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பொதுகூட்டம் நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நடிகர் ரஞ்சித், திரைப்பட இயக்குநர் மோகன்ஜி உட்பட ஏராளமான மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக்கூட்டம் நிறைவுக்கு பின், ஆலாங்காட்டில் இருந்து கிளம்பிய சிலைகள் மங்கலம் அருகே சாமளாபுரத்தில் உள்ள குளத்தில் இரவு நேரத்தில் கரைக்கப்பட்டன. நகரம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை