உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பணம் பறித்த கும்பல் கைது

பணம் பறித்த கும்பல் கைது

பல்லடம் : கிரைண்டர் செயலி வாயிலாக ஆசை வார்த்தை கூறி, கேரள வாலிபரிடம் பணம் பறித்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் அனீஷ், 32. பல்லடம் அடுத்த சுக்கம்பாளையத்தில் உள்ள கிரஷர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். 'கிரைண்டர்' செயலி வாயிலாக, இவரை தொடர்பு கொண்ட சிலர், ஆசை வார்த்தை கூறி, தனியாக காட்டுப்பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு, அனீஷை மிரட்டி, அடித்து தாக்கிய நான்கு பேர் கொண்ட கும்பல், அவரது கூகுள் பே கணக்கில் இருந்து, 95 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு விரட்டினர். அனீஷ் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் போலீசார் வழக்கு பதிந்து, சபரி ராஜன், 28 நவீன் குமார், 25, சந்திர பிரகாஷ், 28, டேனியல், 25 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது, திருப்பூர், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !