உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊராட்சியில் குப்பை கழிவுகள் தேக்கம் :நோய் தொற்று ஏற்படும் அபாயம்

ஊராட்சியில் குப்பை கழிவுகள் தேக்கம் :நோய் தொற்று ஏற்படும் அபாயம்

உடுமலை:உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சியில், குப்பைக்கழிவுகள் சுத்தம் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளதால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்தில், மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளில் கணக்கம்பாளையமும் உள்ளது. இந்த ஊராட்சியில் அடிப்படை தேவையான சுகாதாரம், ரோடு வசதிகள் அரைகுறையான நிலையில் இருப்பதால், மழை நாட்களில் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.ஊராட்சியின் சிந்துநகர் பகுதியில், ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகள் பல நாட்களாக அகற்றப்படாததால், குவிந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் கழிவுகளும் கொட்டப்படுகிறது.கடந்த சில நாட்களாக மழை பெய்ததில், மழைநீர் கழிவுகளில் தேங்கியுள்ளது. மழைநீரில் கழிவுகள் முழுவதும் தேக்கமடைந்து மிகுதியான துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.கொசுப்புழு உற்பத்தியும் அப்பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு நோய்பரவும் சூழலும் ஏற்பட்டு வருகிறது.அதேபோல், முத்துசாமிகவுண்டர் லே - அவுட் பகுதிகளில் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், மழைநீர் குடியிருப்புகளின் அருகில் தேங்கியுள்ளது. ஊராட்சிகளில் முறையான வடிகால் இல்லாததால், மழை நாட்களில் தொடர்ந்து இப்பிரச்னை ஏற்படுகிறது.குளமாக தேங்கி நிற்கும் மழைநீரில் தான், மக்கள் நடந்து செல்கின்றனர். குழந்தைகளும் இவ்வாறு செல்வதால் தோல், பிரச்னைகள் ஏற்படுவதற்கான சூழலும் உண்டாகியுள்ளது.கணக்கம்பாளையத்தில் அடிப்படை பிரச்னைகளை சரிசெய்வதற்கு, ஊராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் அளிப்பதில்லை என, பொதுமக்களும் புகார் கூறுகின்றனர்.குடியிருப்புகளில் மழைநீர் தேங்காமலும், கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை