உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை கொட்டும் விவகாரம்; போராட்டம் தீவிரமாக்க முடிவு

குப்பை கொட்டும் விவகாரம்; போராட்டம் தீவிரமாக்க முடிவு

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி பகுதி குப்பைகள் பொங்கு பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள பாறைக் குழியில் கொட்டப்பட்டு வருகிறது.குப்பையால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், சுகாதார கேடு ஏற்படும், பாறைக் குழியில் குப்பை கொட்ட அனுமதிக்ககூடாது என பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், மாநகராட்சி சார்பில், தொடர்ந்து, குப்பை கொட்டப்பட்டு வருகிறது.குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார், 2024 டிச., 23ம் தேதி முதல் பாபுஜி நகரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள், 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து, 29ம் தேதி மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அதை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், உண்ணாவிரதத்தை முடித்து கொண்டு, தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், போராட்டத்தை ஒருங்கிணைந்து தீவிரப்படுத்துவது, திருப்பூர் மாவட்டத்தில் பாறைக் குழியில் குப்பை கொட்டி சுற்றுச்சூழலை அழித்து வருவதை தடுப்பது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பா.ம.க., - த.வெ.க., - கொ.ம.தே.க., - வி.சி.க., - எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ