ஆடை உற்பத்தி தொழில்நுட்ப கண்காட்சி ஜி.டி.இ., அழைக்கிறது
கி ரேட்டர் நொய்டாவில் இயங்கும், இந்தியா எக்ஸ்போ மையம்சார்பில், 'கார்மென்ட் டெக்னாலஜி' கண்காட்சி (ஜி.டி.இ.,) நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம், குஜராத் மாநிலம், காந்திநகரில், ெஹலிபேட் கண்காட்சி மையத்தில், நவ., 7, 8, 9ம் தேதிகளில், ஆடை உற்பத்தி தொழிலுக்கான, 36வது அகமதாபாத் கண்காட்சி நடத்துகிறது. நொய்டாவில் உள்ள இந்திய எக்ஸ்போ மையத்தில், 2026 மார்ச் 20, 21, 22, 23ம் தேதிகளில், 'டில்லி என்.சி.ஆர்.,' என்ற 38 வது கண்காட்சி நடக்க உள்ளது. பெங்களூருவில், காயத்ரி விஹார் அரண்மனை வளாகத்தில், 2026 செப்., 18, 19, 20ம் தேதிகளில், 40வது கண்காட்சி நடக்க உள்ளது. கண்காட்சியில், தையல் இயந்திரங்கள், எம்பிராய்டரி மெஷின், டிஜிட்டல் பிரின்டிங், பின்னல் இயந்திரம், லேசர் கட்டிங், வெப்ப பரிமாற்ற இயந்திரம், கட்டிங் இயந்திரங்கள், தளவாடங்கள், மென்பொருட்கள் என, ஆடை தயாரிப்புக்கான அனைத்து மெஷின்களும், சேவைகளும், இந்நிறுவனம் நடத்தும் கண்காட்சியில் கிடைக்கும். ஆயத்த ஆடை தயாரிப்பு தொடர்பான கண்காட்சிகள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, இணை நிர்வாக இயக்குனர்ரோக்கி ராஹ்னியை, 98101 43711, 72900 89803 என்ற எண்களில் அணுகலாம் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.