உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்

திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மற்றும் அறக்கட்டளை, லயன்ஸ் மைக்ரோ லேப், திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் அறக்கட்டளை, திருப்பூர் ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை, ஆரோக்கியம் அக்குபஞ்சர், தொடுசிகிச்சை மையம் சார்பில், காந்திநகர் லயன்ஸ் கிளப் பார்மஸி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை, அக்குபஞ்சர், இருதய பரிசோதனை, பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது.சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர், செந்தில்குமார், செயலாளர் வெங்கடசுப்ரமணியம், அறங்காவலர் ரங்கசாமி, பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். கண் சிகிச்சை முகாமில், 90 பேர் பங்கேற்றனர்; பத்துபேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டனர்; 21 பேருக்கு கண்கண்ணாடி வழங்கப்பட்டது. அக்குபஞ்சர் சிகிச்சைக்கு, 30 பேரும், பொது மருத்துவ முகாமில், 80 பேரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை