உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லுாரியில் படிக்கும் போதே கிடைக்குது வேலை

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லுாரியில் படிக்கும் போதே கிடைக்குது வேலை

திருப்பூர்: ''கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ைஹடெக் பொறியியல் கல்லுாரியில், படிக்கும் போதே, மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுத்தரப்படுகிறது'' என, பவானி எம்.எல்.ஏ.,வும், அறக்கட்டளை செயலருமான கருப்பண்ணன் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: ஸ்ரீ வெங்கடேஸ்வராகல்வி அறக்கட்டளையின் கீழ், 11 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன; 11,355 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரி, தன்னாட்சி அங்கீகாரம் பெற்று, என்.ஏ.ஏ.சி.,யின் 'ஏ' கிரேடு அங்கீகாரம் மற்றும் நான்கு பாடப்பிரிவுகளில் என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்றுள்ளது. டிஜிட்டல் நுாலகம், ஸ்மார்ட் கிளாஸ், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க தேவையான ஆய்வகம், நவீன வசதி நிறைந்த கேன்டின், வளாகம் முழுக்க சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்புடன் கல்வி நிலையம் செயல்படுகிறது. மருத்துவ வசதி, விபத்து காப்பீடு, சுகாதாரமான உணவுடன் கூடிய வசதியான தங்கும் விடுதி வசதியும் உள்ளது.இறுதியாண்டு படிக்கும் போது, போட்டி தேர்வு வாயிலாக பன்னாட்டு நிறுவனங்கள், பெரு நகரங்களில் உள்ள பல்நோக்கு மருத்துவமனைகளில், ஆண்டுக்கு, 3.60 லட்சம் ரூபாயில் இருந்து, 12 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படுகிறது. கடந்தாண்டு, 97 சதவீத மாணவர்கள் வளாக தேர்வில், வேலை வாய்ப்பு பெற்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ