உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்கள் செல்வதற்கான வழி வாகனம் கவிழ்வதால் கிலி

மக்கள் செல்வதற்கான வழி வாகனம் கவிழ்வதால் கிலி

பல்லடம்; பல்லடம் அடுத்த, சேடபாளையம் - வெட்டுப்பட்டாங்குட்டை ரோடு, புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கின.பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:சேடபாளையம் -- வெட்டுப்பட்டாங்குட்டை ரோட்டில், ஏராளமான வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளன. திருப்பூர் -- பல்லடம் செல்லும் நெடுஞ்சாலையை இணைப்பதால், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இவ்வழியை பயன்படுத்தி வருகின்றனர். பனியன் கம்பெனி மற்றும் பள்ளி வாகனங்களும் வந்துசெல்கின்றன.மோசமாக உள்ள இந்த ரோடு புதுப்பிப்பதற்காக, கடந்த மூன்று மாதம் முன் பழைய ரோடு தோண்டப்பட்டது. ஆனால், பணி மேற்கொள்ளப்படவில்லை. ஜல்லிக்கற்கள் ரோடு முழுவதும் பரவிக் கிடப்பதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் கவிழ்வதால், பலர் தவறி விழுந்து காயமடைகின்றனர்.பள்ளி செல்லும் மாணவ மாணவியரும் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். கிடப்பில் உள்ள ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை