உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமி கர்ப்பம்; தொழிலாளி கைது

சிறுமி கர்ப்பம்; தொழிலாளி கைது

திருப்பூர்; திருப்பூரில், 16 வயது சிறுமியை ஆறு மாதம் கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரை சேர்ந்தவர் கிரி, 20; தொழிலாளி. இவர் பெற்றோர் இல்லாத நிலையில் பாட்டி பராமரிப்பில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்த, 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். சிறுமிக்கு திடீரென உடல் நலப் பிரச்னை ஏற்பட்டது.திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. டாக்டர்கள் கொடுத்த தகவலின் பேரில், சமூக நலத்துறையினர் விசாரித்தனர். புகாரின் பேரில், கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார், கிரி மீது குழந்தை திருமணம், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !