பள்ளியில் பெண் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம்
உடுமலை; உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெண் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். பள்ளி தலைமையாசிரியர் கனிமொழி, பேரணியை துவக்கி வைத்தார்.அறிவியல் ஆசிரியர் ரத்தினசாமி வரவேற்றார். பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவி சசிபாரதி பேசினார். மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். தமிழாசிரியர் சுரேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.